tamilnadu

img

பிஎம் கேர்ஸூக்கு ரூ. 10 கோடி கொடுத்துள்ளேன்... பான் மசாலா, குட்காவை தடை செய்து விடாதீர்கள்..

லக்னோ:
கொரோனாவையொட்டி, உத்தரப்பிரதேசத்தில் கடந்த மார்ச் 25 முதல் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு அம்மாநில பாஜக அரசுவிதித்தது. பின்னர் இந்தத் தடையை,மே 6-ஆம் தேதி அவசர அவசரமாக விலக்கிக் கொண்டது. புகையிலை அல்லது நிகோடின்இல்லாத பான் மசாலா-வை விற்றுக்கொள்ளலாம் என்று அனுமதியும் வழங்கியது. ஆனால், இதற்கு எதிர்ப்புக்கள் எழுந்தன. 

பான் மசாலா, குட்கா போன்றவை போதையை தருகின்றன என்பதற்காக மட்டுமல்ல, அதனை மெல்லும் நுகர்வோரை பொது இடங்களில் துப்ப வைக்கிறது; அதன்மூலம் கொரோனா பரவும் ஆபத்தை அதிகரிக்கிறது என்பதற்காகத்தான் உத்தரப்பிரதேச அரசு முன்பு தடை விதித்தது. ஆனால் தற்போது நிகோடின் இல்லாத குட்கா, பான்மசாலாவை விற்றுக் கொள்ளலாம் என்றால்,அதனை மெல்லுபவர்கள் துப்ப மாட்டார்களா? கொரோனா பரவாதா? என்று கேள்விகள் எழுந்தன.இதுதொடர்பாக, லக்னோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சஞ்சய் சர்மா, எந்த வடிவத்திலும் பான் மசாலாவை விற்கக் கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், பான் மசாலாதயாரிப்பில் ஈடுபட்டு வரும் தரம்பால்சத்யபால் லிமிடெட் மற்றும் அதன் முதலாளி ‘ரஜ்னிகந்தா’ பதில் மனுதாக்கல் செய்துள்ளார்.அதில், “பான் மசாலாவுக்கு தடை விதிக்க வேண்டியதில்லை” என்றும், இந்த மோசமான கொரோனா பரவல் தருணத்தில் அதன் பொறுப்புகள் பற்றி தங்கள் நிறுவனம் அறிந்திருப்பதாகவும், அதன் காரணமாகவே, பி.எம்கேர்ஸ் நிதிக்கு ரூ. 10 கோடியும்,கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு 10 கோடி ரூபாயும் நந் கொடை அளித்துள்ளோம் என்றும் வாதாடியுள்ளார்.இந்த வழக்கு ஜூலை 8 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

;